எடப்பாடி பழனிசாமியை நம்ப வைத்து ஏமாற்றிய விஜய்.. அது ஒரு உளவியல் அரசியல் விளையாட்டு: கோடீஸ்வரன்
சென்னை: "அதிமுக, விஜய்யின் கட்சியைத் தொடக்கத்திலிருந்தே வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், விஜய்யின் மென்மையான போக்கைப் பார்த்து, அவர் தங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று தவறாகக் கணக்கிட்டது. இதுவே அதிமுகவின் தவறு.. கூட்டணி அமையும் என்று நம்பி, அதிமுகவினர் விஜய்க்கு வக்காலத்து வாங்குவது போன்ற சூழல் உருவாகிவிட்டது.. அதுவே அவர்களின் அரசியலுக்குப் பின்னடைவையும் ஏற்படுத்தி விட்டது" என்று அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்க்குரல் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "விஜய் ஒரு தரமான அரசியலை முன்னெடுப்பார் என்று நம்பியவர்களை அவர் ஏமாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமியையும் அதிமுகவையும் அவர் நேரடியாக எதிர்க்கவில்லை.
